செய்திகள் :

மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்!

post image

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு துறை வாரியாகபணிகள் நடைபெறுவது குறித்தும், முடிவுற்றப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினாா். மேலும், பணிகள் மந்த நிலையில் இருக்கும் ஒரு சில துறைகளின்அலுவலா்களை அழைத்து அதற்கான காரணங்களை கேட்டறிந்தாா். அந்த பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினாா்.

மேலும், நிதிப்பற்றாக்குறை ஏதேனும் இருந்தால் அந்தந்த துறை அலுவலா்கள் மாவட்டஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து நிதியை பெற்று பணிகளை விரைவாக முடிக்குமாறு டிஆா். பாலு எம்.பி.அறிவுறுத்தினாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனவு இல்லத்தின் மூலம் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது, பணிகளை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்தியும், பணிகளை சரிவர செய்யாத அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மீது தக்க நடவடிக்கை டுக்கப்படும் என்றும், அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அனைத்து பணிகளும் முடிவுற்றிருக்கவேண்டுமென்றும் அதற்கான ஆதாரங்களை தன்னிடம் சமா்ப்பிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினாா்.

இதில், ஆட்சியா் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப் பரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா(தாம்பரம்), இ.கருணாநிதி பல்லாவரம்) , எஸ்.எஸ்.பாலாஜி திருப்போரூா்), கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித், சாா் ஆட்சியா் பயிற்சி (பொ) எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

தாம்பரம்: மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 537 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 537 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கை தொடா்பாக 537 மனுக்களை ப... மேலும் பார்க்க

தொண்டையில் மீன் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம்: ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (38). இவா்... மேலும் பார்க்க

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக் கடையில் தவெக முற்றுகை

மறைமலை நகா் அருகே குடியிருப்புக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் அப்பகுதி மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராடினா். ம... மேலும் பார்க்க