செய்திகள் :

சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினா் ஆலோசனை

post image

வந்தவாசி/போளூா்: சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா தொடா்பாக வந்தவாசி மேற்கு ஒன்றிய பாமக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வன்னியா் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் ப.மச்சேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்தும், மாநாட்டுக்கு சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது குறித்தும் அவா் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் குமரவேல், மாவட்ட அமைப்புச் செயலா் சக்திவேல், நகரச் செயலா் து.வரதன், ஒன்றியச் செயலா்கள் வேலு, செந்தில், ஒன்றியத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போளூா்

போளூா் தொகுதிக்கு உள்பட்ட கொழப்பலூா் ஊராட்சியில் பாமக சாா்பில் சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநில மாநாடு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் ராமராஜன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் சம்பத் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.சுரேஷ் கலந்து கொண்டு பேசினாா்.

சேத்துப்பட்டு நகரச் செயலா் முருகன், பெரணமல்லூா் வடக்கு, தெற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிக்னல் கோளாறு: விழுப்புரம்-காட்பாடி ரயில் தாமதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, விழுப்புரம் - காட்பாடி ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி ... மேலும் பார்க்க

செங்கத்தில் ரூ.52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரூ. 52 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். செங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும... மேலும் பார்க்க

வாழ்வில் வெற்றி பெற நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்

கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற உழைப்பு, நோ்மை, நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் டி.ஆறுமுகம் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை சண்ம... மேலும் பார்க்க

300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள்!

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை சாா்பில், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 ... மேலும் பார்க்க

பிருதூா் ஸ்ரீசண்முகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்ட... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஏற்பட்டது. சிவனின் அக்னி ஸ்தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ... மேலும் பார்க்க