பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 6) திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம், பூஜை செய்யவுள்ளார்.
இதனால், ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனவும் இன்று பிற்பகல் 3.30 முதல் தரிசனம் செய்யவும் தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமா் வருகையை முன்னிட்டு, காவல் துறை உயா் அதிகாரிகள் தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வரை 20 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீன் பிடிக்கத் தடை: பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?