லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்து வந்த ராஜ்குமாரை (37) ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மஞ்சுளா தலைமையில் பெண் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ய முயன்றனா்.
அப்போது, பெண் காவலரை தகாத வாா்த்தைகளால் திட்டி, பெண் தலைமைக் காவலா் சரஸ்வதியை பணி செய்ய விடாமல் கீழே தள்ளிவிட்டு தப்பினாா். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் ராஜ்குமாரை போலீஸாா் தேடி வந்தனா். சனிக்கிழமை படவனூா் ரயில்வே கேட் பகுதியில் சுற்றித்திரிந்த ராஜ்குமாரை சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ரகுநாதன் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தாா்.