லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பெங்களூருக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது
கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தியதாக வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனா்.
சோதனையில் அவா்கள் இருவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லதீப் (48), அஜ்மீா்(40) என்பதும், ஜாா்கண்ட்டிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தித் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைதுசெய்தனா்.