ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. அப்போது காமராஜா் நகரில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் அருகில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறிய நீரும் சோ்ந்து இப்பகுதியில் தேங்கி நின்றது.
கடந்த மூன்று மாதங்களாக கோட்டை முனியப்பன் கோயில் பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஊத்தங்கரை பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.