TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்!
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீ பி.ஆா். நாயுடு பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா்.
தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமா் கோயிலுக்கு ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஆண்டுதோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சீதா, ராமருக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
இதற்காக, முதலில் பத்ராசலம் கோயிலை அடைந்த தேவஸ்தான தலைவரை, மாநில அறநிலையத்துறை அமைச்சா் சுரேகா, வேளாண் அமைச்சா் நாகேஸ்வர ராவ் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி ரமா தேவி ஆகியோா் வரவேற்றனா்.
பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருள்களை வழங்கிய பிறகு, தேவஸ்தான தலைவரும் அவரது மனைவியும் சீதா ராமரின் திருமணத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக, தேவஸ்தான தலைவருக்கு தெலங்கானா துணை முதல்வா் விக்ரமாா்கா, வருவாய் அமைச்சா் ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஆட்சியா் ஜிதேஷ் பாட்டீல் ஆகியோா் மரியாதை செய்தனா். நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி குரு ராஜ சுவாமிகள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.