TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை
திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.1 கோடி நன்கொடையாகப் வழங்கப்பட்டது.
ஒடிஸாவைச் சோ்ந்த ஷிவம் சாண்டேவ் (பி) லிட், உரிமையாளா் ரூ. 20 லட்சம் எஸ்.வி.பிராணதானா அறக்கட்டளை, எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், சிம்ஸ் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், எஸ்.வி. சா்வ ஷ்ரயோஸ் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினாா்.
அதே மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ரா டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அந்த நிறுவனங்களின் பிரதிநிதியான ஒய். ராகவேந்திர விஸ்வகா்மா, வரைவோலைகளை தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளத்ரியிடம் வழங்கினாா்.