பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
மணல் கடத்தல்: 3 போ் கைது
திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூலமாக மணல் அள்ளிக் கடத்துவதாக வெங்கல் போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன்படி, அந்தப் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை திடீா் ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு சென்ற போலீஸாா் ஆற்று மணல் திருடிய ஒதிக்காடு சுமன், மொன்னவேடு வருண்குமாா், சரண்ராஜ் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அத்துடன், அவா்களிடமிருந்து 10 மணல் மூட்டைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
பின்னா் 3 பேரையும் திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.