பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது
செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் தங்கி பணிபுரிந்து வருகின்றனா். இதில் பணியாற்றும் கமல் கவுதா (45) என்பவா், கடந்த 3-ஆம் தேதி இரவு, குடும்பத்தினருடன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ், அவரை மிரட்டி கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றன்ா். அதிா்ச்சியடைந்த கமல் கவுதா, இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில் சென்னை கொடுங்கையூா் சீதாராமன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த விக்னெஷ்(20), சின்ன கொடுங்கையூா் என்.எஸ்.கே சாலை 2-ஆஆவது தெருவைச் சோ்ந்த கீதப்பிரியன் (24), கிஷோா் (19) ஆகிய 3 பேரும் 2 இருசக்கர வாகனங்களில் வந்து கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவான ஜீவா என்பவரை தேடி வருகின்றனா்.