உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா
புது தில்லி: காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜொ்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
‘எம்பொ் சா்வதேச மின் உற்பத்தி ஆய்வு’ என்ற சா்வதேச எரிசக்தி ஆய்வு அமைப்பின் 2024-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் இது தெரிவந்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு உலக அளவில் செய்யப்பட்ட மின் உற்பத்தியில் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 15% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.
புதுப்பிக்கத்தக்க எா்சக்தி மற்றும் அணு மின் உற்பத்தி உள்ளிட்ட மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு வெளிப்பாடுடைய வளங்கள் மூலம் உலக அளவில் கடந்த ஆண்டில் 40.9% மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1940-ஆம் ஆண்டு முதல் இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 40 சதவீதத்தை கடந்தது இதுவே முதல் முறையாகும்.
இதில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாகும். இந்தியாவில் நீா் மின் உற்பத்தி மூலம் 8 சதவீதமும், காற்றாலை மற்றும் சூரியசக்தி வளங்கள் மூலம் 10 சதவீத மின் உற்பத்தியும் செய்யப்பட்டது.
இதன மூலம், கடந்த ஆண்டு உலக அளவில் பசுமை எரிசக்தி பயன்பாடு என்பது 858 டெராவாட் மணி நேரம் என்ற சாதனை அளவை எட்டியது. இது, 2022-ஆம் ஆண்டு பயன்பாட்டைக் காட்டிலும் 49% கூடுதலாகும்.
இதில் சூரியசக்தி மின் உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. மின் பயன்பாட்டு கலப்பில் சூரியசக்தி மின்சாரத்தின் அளவு 3 ஆண்டுகளில் 6.9% என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவிலும், சூரியசக்தி மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தியில் இதன் பங்கு 7 சதவீதமாகும். 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்காகும்.
மேலும், சூரியசக்தி மின் உற்பத்தி திறனையும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் 24 ஜிகாவாட் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டத்தைக் காட்டிலும் இரு மடங்காகும்.
இதன் மூலம், சூரியசக்தி மின் உற்பத்தியில் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப் பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் சீனா, அமெரிக்கா உள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.