ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை
சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்பத்துக்கு யாா் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா் அமைச்சா் சேகா்பாபு.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவா்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினா், காலகாலமாக ஹிந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறாா்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சா் சேகா்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவா் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சா் சேகா்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும்.
நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என அண்ணாமலை கூறியுள்ளாா்.