செய்திகள் :

இளையராஜா: `மாற்றுத்திறனாளிகளுக்கு ஃப்ரீ; தூய்மை பணியாளர்களுக்கு சலுகை - கருர் இசை நிகழ்ச்சி அப்டேட்

post image

`இசைஞானி' இளையராஜா தனது லண்டன் சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு பிறகு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

பந்தல்கால் நடும் விழா

அந்த வகையில், முதல் கட்டமாக கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் 'ராஜாவின் இசை ராஜாங்கம்' என்ற பெயரில் நடக்க இருக்கும் அவரது இசை நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா மே 1-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக கோடங்கிபட்டியில் நிகழ்ச்சிக்கான பூமி பூஜை பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ கோகுல் ஈவன்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தமிழக திரையுலகின் மாபெரும் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா, சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். 30,000 பேர் பங்கேற்க கூடிய அளவில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக, டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் இதுவரை சுமார் 10,000 பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். மேலும், இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் இசை ரசிகர்களுக்கு வாகன பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, கேன்டீன் வசதி, மருத்துவ மற்றும் தீயணைப்பு தடுப்பு குழுக்கள் என பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இசை ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.

பந்தல்கால் நடும் விழா

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள், லாரி ஓட்டுநர்களுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 'ராஜாவின் இசை ராஜங்கம்' எனும் இசைஞானி இளையராஜாவின் இந்த நேரடி இசை நிகழ்ச்சியில், தமிழ்த்திரை உலகின் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி சரண், ஸ்வேதா மோகன், மதுபாலகிருஷ்ணன், கார்த்திக் உள்ளிட்டவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களும் பங்கேற்கின்றனர்" என்றார்.

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க