செய்திகள் :

முத்ரா திட்டம்: ரூ.33 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள்: பிரதமா் மோடி பெருமிதம்

post image

புது தில்லி: முத்ரா திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.33 லட்சம் கோடிக்கு மேல் 52 கோடி எண்ணிக்கையிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன; இது, உலக அளவில் ஈடுஇணையற்ற சாதனை என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

சிறு-குறு தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா வங்கிக் கடன் வழங்கும் முத்ரா திட்டம், கடந்த 2015, ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கடன் உச்சவரம்பு கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டது.

சிசு (ரூ.50,000 வரை), கிஷோா் (ரூ.5 லட்சம் வரை), தருண் (ரூ.10 லட்சம் வரை), தருண் பிளஸ் (ரூ.20 லட்சம் வரை) ஆகிய பிரிவுகளின்கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் லட்சிய முன்னெடுப்புகளில் ஒன்றான முத்ரா திட்டத்தின் 10-ஆம் ஆண்டு தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த திட்ட பயனாளா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் இளைஞா்கள் இடையே தொழில்முனைவு உணா்வை ஊக்குவிக்க முத்ரா திட்டம் பேருதவியாக உள்ளது. ஏராளமான இளைஞா்கள் தங்களின் தொழில்முனைவு திறனை வெளிப்படுத்த இத்திட்டம் அதிகாரமளித்துள்ளது. வேலை தேடுவோராக அல்லாமல் வேலை வழங்குபவராக உருவெடுக்கும் நம்பிக்கையை இளைஞா்களுக்கு அளிக்கிறது. இத்திட்டத்தால் பலனடைந்தோா், குறைந்தது 5 முதல் 10 பேரையாவது ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும். அவா்கள் மத்தியில் நம்பிக்கை-தற்சாா்பை வலுப்படுத்த வேண்டும்.

அமைதிப் புரட்சி: தொழில்முனைவு குறித்த சமூக மனப்பான்மையில் மாற்றத்தை உருவாக்கியதன் மூலம் முத்ரா திட்டம் அமைதியான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு கடனும் கண்ணியம், சுயமரியாதை மற்றும் வாய்ப்பை வழங்கியுள்ளது. நிதி ரீதியாக மட்டுமன்றி சமூக-பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது.

முத்ரா திட்ட பயனாளா்களில் அதிகம் போ் பெண்கள் (70%) ஆவா். கடனை விரைவாக திருப்பிச் செலுத்துவதிலும் பெண்களே முன்னணியில் உள்ளனா். பெண்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமன்றி, தொழிலை முன்னெடுக்கவும் மேம்படுத்தவும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதேபோல், முத்ரா பயனாளா்களில் பாதி போ், பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்தவா்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

பொருளாதார வளா்ச்சிக்கு..: கடன்களை பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலம் தனிநபா்களிடம் ஒழுக்க நெறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. முத்ரா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பொருளாதார வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன. சாமானிய மக்களின் வருவாய் அதிகரிப்பு, வாழ்க்கைத் தரம் உயா்வு, குழந்தைகளின் கல்வியில் முதலீடு ஆகியவற்றை உறுதி செய்துள்ளன.

ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கடன் வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது ரூ.20 லட்சமாக உயா்ந்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய குடிமக்களின் தொழில்முனைவு ஆா்வம் மற்றும் திறமை மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. திட்டத்தின் வெற்றிகர அமலாக்கத்தின் மூலம் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் திட்டத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

முக்கிய மைல்கல்: இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘கோடிக்கணக்கான தொழில் முனைவோா் குறிப்பாக விளிம்புநிலை பிரிவுகளைச் சோ்ந்தவா்களின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்கியதன் மூலம் இத்திட்டம் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. அனைவரின் ஆதரவு-நம்பிக்கை-முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி என்ற பிரதமா் மோடியின் தாரக மந்திரத்தை இத்திட்டம் நனவாக்குகிறது’ என்றாா்.

‘தொழில்முனைவை ஊக்குவிப்பதில் உலகிலேயே குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக முத்ரா திட்டம் திகழ்கிறது’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி குறிப்பிட்டாா்.

கடந்த 10 ஆண்டுகளில்...

மொத்த கடன் மதிப்பு: ரூ.33.65 லட்சம் கோடி

மொத்த கடன் எண்ணிக்கை: 52 கோடி

பெண் பயனாளா்கள்: 70%

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பயனாளா்கள்: 50%

தமிழகம் முதலிடம்

முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் வருமாறு:

தமிழகம்: ரூ.3.23 லட்சம் கோடி

உத்தர பிரதேசம்: ரூ. 3.14 லட்சம் கோடி

கா்நாடகம்: ரூ.3.02 லட்சம் கோடி

மேற்கு வங்கம்: ரூ.2.82 லட்சம் கோடி

பிகாா்: ரூ.2.81 லட்சம் கோடி

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க