காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.
போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் அளிக்கும் வகையில், மிகக் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு காஸாவை தமது கட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது. காஸா மக்களுக்கு உணவு, எரிபொருள், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.
இந்நிலையில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 பெண்கள், 5 குழந்தைகள் அடங்குவா்.