குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி ச...
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
மும்பை: அதிகரித்து வரும் கட்டணப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக பரவலான உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82 ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி மற்றும் பலவீனமான அமெரிக்க நாணயம் ஆகியவற்றால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்கு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை திரும்பப் பெறும் காரணமாக உள்நாட்டில் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பல நாடுகள் மீது அமெரிக்க பரஸ்பர கட்டணங்கள் விதித்துள்ள நிலையில் சீனாவின் பதிலடி நடவடிக்கை தொடர்ந்து, முதலீட்டாளர்கள் அபாயத்திலிருந்து தப்பிக்க முயன்றதால் உலகளவில் நாணய பரிமாற்ற சந்தைகள் இன்று தீவிர ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.79 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.57 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.90 ஐ தொட்ட நிலையில், முடிவில் 38 காசுகள் சரிந்து ரூ.85.82 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!