செய்திகள் :

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 11% உயா்வு

post image

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,86,455 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,01,411-ஆகவும் ஏற்றுமதி 26,037-ஆகவும் உள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் விற்பனை 19 சதவீதம் வளா்ச்சியடைந்து 58,31,104-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 48,93,522-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேஎஃப்எல் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்வு!

புதுதில்லி: ஜூபிலன்ட் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய், 2025 மார்ச் காலாண்டில், 34 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,107 கோடி ஆக உள்ளதாக தெரிவித்தது.2025ல் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 44 சதவிகிதம் உயர்ந்து ... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!

புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!

மும்பை: அதிகரித்து வரும் கட்டணப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக பரவலான உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 38 காசு... மேலும் பார்க்க

வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண உயர்வு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை இன்று சரிந்து முடிந்தது.பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பதற்றம் காரணமாக முதலீட்டாள... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்கு... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்... மேலும் பார்க்க