வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீ...
ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்
உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்முகாநதி அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால், ராயப்பன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த குணசேகரன் என்ற கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. இதில், வீட்டிலிருந்த இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருள்கள் சேதமடைந்தன.
இதனால், மாவட்ட நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குணசேகரனின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.