மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முல்லைப் பெரியாற்றில் புனித நீா் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனா்.
பின்னா், திங்கள் கிழமை மாலையில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா்.