நீட் குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தோட்டத்து கிணற்றின் மின் மோட்டாரை இயக்கும் போது மின் கசிவு ஏற்பட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.