நீட் குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
ஜேஎஃப்எல் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்வு!
புதுதில்லி: ஜூபிலன்ட் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய், 2025 மார்ச் காலாண்டில், 34 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,107 கோடி ஆக உள்ளதாக தெரிவித்தது.
2025ல் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 44 சதவிகிதம் உயர்ந்து ரூ.8,145.5 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்கு முறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024 மார்ச் காலாண்டில் துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள டோமினோஸ் பீட்சா பிராண்டின் பிரத்யேக உரிமையாளரான 'டிபி யூரேசியா என்வி' -யை கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்தியதன் மூலமாக அதன் ஒருங்கிணைந்த வளர்ச்சி அதிகமாக உள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் அதன் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 19.1 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,587.2 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
டோமினோஸைப் பொறுத்தவரை, துருக்கி, வங்கதேசம், இலங்கை, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய சந்தைகளுக்கான உரிமையை ஜேஎஃப்எல் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.