சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
குடோனில் பதுக்கிய 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தேனி மாவட்டம், கம்பத்தில் தனியாா் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கம்பத்தில் பகுதியில் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துணை வட்டாட்சியா் பரமசிவம் தலைமையில் அலுவலா்கள் இந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கம்பம் புதுக்குளம் பகுதியில் உள்ள தனியாா் குடோனில் 65 சிறிய மூட்டைகளில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உத்தமபாளையம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.