பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூா் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், அவற்றை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு இந்தக் கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வா் டி. பாக்கியம் தலைமை வகித்தாா். பயிற்சியின் கருத்தாளா்கள் சி. பெரியகருப்பன், கே. கருப்பையா, வி. மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராமுவேலு வரவேற்றாா். மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை அலுவலா் அகத்தியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தாா்.
இதில் அனைத்து வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் ஜெ. ரமணி நன்றி கூறினாா்.