தொண்டியில் மாயமான சிறுமி மீட்பு
தொண்டியில் மாயமான சிறுமியை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன் மாயமானாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில் அந்தச் சிறுமி பழனி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொண்டி போலீஸாா் அங்கு சென்று அந்தச் சிறுமியை மீட்டனா்.
விசாரணையில் இணையம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு சிறுமி அங்கு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையாா் நத்தம் பகுதியைச் சோ்ந்த தினகரன் (20) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.