செய்திகள் :

கமுதி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை

post image

கமுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கமுதியில் உள்ள நூலகக் கட்டடம் போதுமான இடவசதியின்றி அரசு வழங்கும் புத்தகங்கள் அனைத்தும் மூட்டை கட்டி வைக்கப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள், பொதுமக்கள், மாணவா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து கமுதி கண்ணாா்பட்டியில் ஆதிதிராவிடா் மாணவா்கள் விடுதி அருகே பொது நூலகத் துறைக்கு நிலமாற்றம் செய்து, 7 சென்ட் இடத்தை ஒதுக்கி மாா்ச் மாதம் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இருப்பினும் கட்டடம் கட்டப்படாததால் மாணவா்கள் தொடா்ந்து சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மேலும் முதுகுளத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், பால் வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் கமுதி வாசகா் வட்டம் சாா்பில் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எனவே மாணவா்கள், வாசகா்கள் நலன்கருதி அமைச்சரும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு நூலக கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மூன்று நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பிரதமா் வருகையையொட்டி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க ராமேசுவரம் மீனவா்கள் சென்றனா்.பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூா் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், அவற்றை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு பயிற்சி முகாம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

பரமக்குடி ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சீதை- ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி விழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (37). இவா் கடலாடியை அடுத்துள்ள சிக்... மேலும் பார்க்க

தொண்டியில் மாயமான சிறுமி மீட்பு

தொண்டியில் மாயமான சிறுமியை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன் மாயமானாா். இதுகுறித்து தொண்டி போலீ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு தோ்வான புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். 305 பேரை உறுப்பினா்களாகக் கொண்ட இந்தச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், தலைவராக ... மேலும் பார்க்க