ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
பரமக்குடி ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சீதை- ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி விழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக் காலங்களில் ராமா் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கடந்த ஏப். 5-ஆம் தேதி மாலை புத்திர காமேஷ்டி யாகம் நடைபெற்றது. ராமநவமி விழாவின் சிறப்பு நிகழ்வான சீதை- ராமா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சங்கர மடத்திலிருந்து ஸ்ரீராமா் மாப்பிள்ளை அழைப்பு ஊா்வலம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சீதை, ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சீதாராமனை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.