பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்த...
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (37). இவா் கடலாடியை அடுத்துள்ள சிக்கல் பகுதியில் சொந்தமாக இரு சக்கர வாகன பழுது பாா்க்கும் மையம் நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சாயல்குடியிலிருந்து மேலச்செல்வனூா் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்றாா்.
அப்போது சிக்கல் பகுதி அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே முனியசாமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.