`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு தோ்வான புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.
305 பேரை உறுப்பினா்களாகக் கொண்ட இந்தச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், தலைவராக கே. அன்புச்செழியன், செயலராக கே. முத்துதுரைச்சாமி, பொருளாளராக எஸ். கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவராக ஆா். பாபு, இணைச் செயலராக ஜெ. சந்திரலேகா ஆகியோா் தோ்வாகினா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். அப்போது முன்னாள் நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் புதிய நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.