13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஆர்சிபிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பும்ரா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட் செய்கிறது.
காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் விளையாடாமலிருந்த ஜஸ்பிரித் பும்ரா இன்றையப் போட்டியில் விளையாடுகிறார். கடந்த போட்டியில் விளையாடாத நிலையில், ரோஹித் சர்மாவும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார்.