மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!
வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) இரவு தீ வைக்கப்பட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தெளபல் மாவட்டம் லிலோங் பகுதியில் உள்ள அவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடி தீ வைத்தது.
சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு ஆயுதமேந்திக்கொண்டு அவரது வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து, லிலோங் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காலவரம்பற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தௌபால் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.