வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர்...
முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக பொருளாளருமான சி.பெருமாள் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. மக்கள் சேவையை சிறப்புற ஆற்றிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அதேபோல், உப்பிலியாபுரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளருமான வி.அரங்கராஜ், மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் திறம்பட ஆற்றியவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளாா்.