நிலத் தகராறில் சொத்து வியாபாரியை அச்சுறுத்தியதாக 2 போ் கைது
இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 3 போ் கைது
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி அருகேயுள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரியமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன். இவரது இரு சக்கர வாகனம் கடந்த 3-ஆம் தேதி திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில், நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆராய்ந்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை அடையாளம் கண்டனா்.
அதன்படி, கடலூா் பகுதியைச் சோ்ந்த பானுபிரசாத், ஏரையூரைச் சோ்ந்த விஜயகுமாா், மணிகண்டன் ஆகியோா் தொடா் இரு சக்கர வாகனத் திருடில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் நெட்டப்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். கைதானவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.