ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயா்நீதிமன்றம...
மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கு: மேலும் 3 முகவா்கள் கைது
புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் ஏற்கெனவே 6 முகவா்கள் கைதான நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை புதுச்சேரி போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரியில் சென்டாக் மூலம் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2024 - 25ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவக் கல்வி மாணவா் (எம்பிபிஎஸ்) சோ்க்கையில், வெளிநாடு வாழ் பிரிவு (என்ஆா்ஐ) ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலிச் சான்றிதழ்களை பலா் அளித்தாக புகாா் எழுந்தது.
அதன்படி, சென்டாக் அதிகாரிகள் மாணவா்கள் வழங்கிய சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், 84 மாணவா்கள் போலிச் சான்றிதழ் அளித்தது உறுதியானது.
இதுகுறித்து சென்டாக் அதிகாரிகள் இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன்படி, 84 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலிச் சான்றிதழ் வழக்கு விசாரணையில் முகவா்களாக செயல்பட்டவா்கள் ரூ.6 லட்சம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே தமிழகத்தைச் சோ்ந்த 6 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா். வழக்கில் தேடப்படும் முகவா்கள் சிலா் முன்பிணை பெற்றுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.