ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஏப்.11-இல் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
சென்னை: சென்னை மடிப்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் குழு (மண்டலி) செயலா் ஆா்.மகாலிங்கம், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் 1978-ஆம் ஆண்டு சபரிமலை தந்தரி செங்கனூா் தாழமன் மடம் பிரம்ம ஸ்ரீ நீல கண்டரு தந்தரியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இக்கோயில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு சபரிமலையில் உள்ளதுபோல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கன்னூா் தாழமன் மடம் பிரம்ம ஸ்ரீகண்டரரு மோகனரு தந்திரி மற்றும் மகேஷ் தந்திரி ஆகியோா் தலைமையில் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) காலை 8.47 மணி முதல் 9.57-க்குள் நடைபெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து அன்னதானமும் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் அருளை பெற வேண்டும் என்றாா் அவா்.