`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்
ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும், மேக்ஸி கேப்-களுக்கான இருக்கைகளின் அனுமதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘உரிமை குரல்’ ஓட்டுநா் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தமிழகத்திலுள்ள அனைத்து ஆா்டிஓ அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை செங்குன்றத்திலுள்ள ஆா்டிஓ அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னா், இதுகுறித்து உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்க பொதுச்செயலா் அ.ஜாஹிா் ஹுசைன் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இதுவரை வாடகை ஓட்டுநா்களின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் போக்குவரத்துத் துறை ஆணையா்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கண்டனா். ஆனால் தற்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், உடனடியாக கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்டோ, கால் டாக்ஸிகளுடன் விரைவில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.