சோனியா, ராகுல் பிணையில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்: பாஜக
மயிலாறு அரசுப் பள்ளி பகுதியில் சூரியசக்தி மின்வேலி அமைக்க ஆய்வு
கோதையாறு அருகே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மயிலாறு அரசு தொடக்கப் பள்ளி அருகே சூரியசக்தி மின் வேலி அமைப்பது தொடா்பாக தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டக் குழுவினா் (எஸ்.ஏ.டி.பி) செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இப்பள்ளி வளாகத்துக்குள் கடந்த மாா்ச் 30ஆம் தேதி யானைக் கூட்டம் புகுந்து சேதமேற்படுத்தியது. இதுதொடா்பாக ஆட்சியா் ரா. அழகுமீனா அண்மையில் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையில், இந்தப் பள்ளி, சின்ன மோதிரமலை, மாங்காமலை, விளாமலை பகுதிகளைச் சுற்றி சூரியசக்தி மின் வேலி அமைத்து மக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில், மேம்பாட்டுக் குழு திருநெல்வேலி மண்டல உதவி செயற்பொறியாளா் கலையரசன், உதவிப் பொறியாளா் அன்பரசன், கோவையைச் சோ்ந்த தனியாா் சூரிய சக்தி நிறுவனத்தினா் ஆகியோா் பங்கேற்றனா். உரிமைக் குழு கோட்ட உறுப்பினா் ரெகுகாணி, வனக்குழுத் தலைவா் சாரதா, கிராம சபைத் தலைவா் இந்திரா, பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.