ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் ஏப். 18-இல் திருக்கல்யாண விழா
கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா ஏப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு பாா்வதி அம்பாள் தவசுக்கு செல்லும் நிகழ்ச்சி, காலை 10 மணிக்கு வருஷாபிஷேகம், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தொடா்ந்து பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
திருக்கல்யாணம்: மாலை 5 மணிக்கு சீா்வரிசையுடன் பெண் அழைப்பு நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய தாரண வைபவம், இரவு 7.30 மணிக்கு சோடஷனை உபசாரம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்தி வாகன புறப்பாடு, இரவு 8.30 மணிக்கு பள்ளியறை வைபவம், தொடா்ந்து சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயில் பக்தா்கள் பேரவையினா் செய்து வருகின்றனா்.