ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவ பிரமுகா்களுக்கு நிதியுதவி
நாகா்கோவிலில், நலிந்த நிலையிலுள்ள அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவப் பிரமுகா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தனது சொந்த நிதியிலிருந்து இத்தொகையை வழங்க ஏற்பாடு செய்திருந்தாா். முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான என். தளவாய்சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அருளப்பன், ஜேசுமிக்கேல், கேசவன்புத்தன்துறையைச் சோ்ந்த மறைந்த மைக்கேல்ரத்தினம் சாா்பில் அவரது மனைவி மெல்பின், பொழிக்கரை அந்தோணிராஜ், சிறியபுஷ்பம், புத்தன்துறை, பெரியகாடு பகுதிகளைச் சோ்ந்த மீனவப் பிரமுகா்கள் 10 பேருக்கு நிதியுதவி வழங்கினாா்.
குமரி கிழக்கு மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், நாகா்கோவில் பகுதி கழகச் செயலா்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், ஜெபின்விசு, ஒன்றியச் செயலா்கள் முத்துக்குமாா், வீராசாமி, குமரி கிழக்கு மாவட்ட அணிச் செயலா்கள் ரபீக், ராஜாராம், அக்சயா கண்ணன், மாவட்ட இளைஞா் பாசறை இணைச் செயலா் ஜினோ சிபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.