`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்
தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்த திட்டத்தை முடிக்க ஒரு மாதம் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான சிவில் மற்றும் மின்சார பணிகள் உள்பட ரூ.2.23 கோடி செலவாகும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் பந்த் மாா்க்கில் ஒரு பங்களாவில் அமைந்துள்ள தில்லி பாஜக அலுவலகம், டிடியு மாா்க்கில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற உள்ளது.
தில்லி பாஜகவின் புதிய ஆடம்பரமான அலுவலகம் 2023 ஆம் ஆண்டு முதல் கட்டுமானத்தில் உள்ளது. இது விரைவில் கட்டி முடிக்கப்படக் கூடும். அதிகமான மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் தங்கும் வகையில் பல மாடி அலுவலகம் அதன் தற்போதைய அலுவலகத்தை விட அதிக இடத்தைக் கொண்டிருக்கும். அடித்தள வாகன நிறுத்துமிடம், மாநாட்டு அறை மற்றும் கூட்ட அறை போன்ற நவீன வசதிகளும் இதில் இருக்கும்.
இதுகுறித்து பாஜக நிா்வாகி ஒருவா் கூறியதாவது: தற்போது மாநில அலுவலகம் எங்கள் தேவைகளை ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
பணிகள் முடிவடைய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். புதுப்பிப்புத் திட்டத்தின்படி, அந்தப் பகுதி சுத்தம் செய்யப்படும். மேலும், சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் போன்ற குறைபாடுகள் சரிசெய்யப்பட உள்ளது. அணுகு சாலை மோசமான நிலையில் உள்ளதாக மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
புதிய எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு, சாலை அடையாளங்கள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், சாலைப் பகுதி சரியாக ஒளிரும்.
சாலை நடைபாதை மேம்பாடு மற்றும் வடிகால் சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபாா்த்தல் ஆகியவை இந்தப் பணியில் அடங்கும் என்றாா் அந்த அதிகாரி.