செய்திகள் :

PBKS vs KKR: "பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - தோல்வி குறித்து ரஹானே

post image

சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

ரஹானே - ஸ்ரேயாஸ்
ரஹானே - ஸ்ரேயாஸ்

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

தோல்விக்குப் பிறகு பேசிய ரஹானே. "இதில் விளக்குவதற்கு எதுவுமில்லை. என்ன நடந்தது என்பதை எல்லோருமே பார்த்தோம். பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன். தவறான ஷாட் அடித்தேன். அதுவுமே விக்கெட் மிஸ்ஸிங்தான் (எல்.பி.டபிள்யு அவுட் ஆன விதம்). அவர் (ரகுவன்ஷி) உறுதியாக இல்லை. அது நடுவரின் அழைப்பாக இருக்கலாம் என்று கூறினார். நான் உறுதியாக இல்லாததால், அந்த நேரத்தில் ரிவ்யூ எடுக்க விரும்பவில்லை. ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தோம். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்கிறோம். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். பஞ்சாப்பை 111 ரன்களில் சுருட்டினர்.

ரஹானே
ரஹானே

ஒரு தனிநபராக நம்பிக்கையுடன், நேர்மறையுடனும் இருக்க வேண்டும். ஸ்வீப் ஷாட் ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது. இன்டெண்ட்டுடன் செல்லுங்கள் ஆனால் கிரிக்கெட்டிங் ஷாட் ஆடுங்கள். நாங்கள் பொறுப்பில்லாமல் இருந்தால், நாங்கள்தான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் என் தலைக்குள் பல்வேறு விஷயங்கள் ஓடுகிறது. நான் இப்போது அமைதியாக, எங்கள் வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று நான் யோசிக்க வேண்டும். நேர்மையாக இருக்கவேண்டும். இன்னும் பாதி போட்டிகள் இருப்பதால், தொடர்ந்து முன்னேற வேண்டும்" என்றார்.

PBKS vs KKR: "IPL-லில் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றி" - நெகிழும் பஞ்சாப் கோச் பாண்டிங்

சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

PBKS vs KKR: "சஹல் பந்தை திருப்பியதும்..!" - ஸ்பெஷல் வின்னிங் குறித்து ஸ்ரேயாஸ்

சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Chahal: "என்னையும், என் திறமையையும் நாம் நம்புகிறேன்" - வெற்றியின் ரகசியம் சொல்லும் ஆட்ட நாயகன் சஹல்

சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

PBKS vs KKR: வாய்ப்பளித்த DRS; வாரிச்சுருட்டிய சஹல்; 33 ரன்களில் ஆட்டம் மாறிய கதை

ஐபிஎல் வரலாற்றிலேயே சாதனை ஆட்டமாக பஞ்சாப் vs கொல்கத்தா ஆட்டம் அமைந்திருக்குகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். பஞ்சாப்பில் ஸ்டாய்னிஸ், யஷ் தாகூரை கழற்ற... மேலும் பார்க்க

PBKS vs KKR : 'பஞ்சாப் பௌலர்களின் வெற்றி கிரிக்கெட்டின் வெற்றி!' ஏன் தெரியுமா?

'பஞ்சாபின் வெற்றி!'வெறுமென 111 ரன்களை மட்டுமே அடித்து கொல்கத்தா அணியை 95 ரன்களுக்குள் வீழ்த்தி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது பஞ்சாப் அணி. இப்படி ஒரு ஆட்டத்தை ஐ.பி.எல்லில் பார்த்தே பல காலம்... மேலும் பார்க்க

Dhoni: 43 வயதில் ஐபிஎல்-லின் 11 வருட சாதனையை முறியடித்த தோனி; கூடுதலாக கோலி சாதனையும் சமன்!

சிஎஸ்கே அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியிலேயே சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தைக் தொடங்கியது. ஆனால், அதற்கடுத்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சி.எஸ்.கே தோல்வியடைந்தது.இத... மேலும் பார்க்க