113 ஆண்டுகளை தொட்ட டைட்டானிக்; ஆனாலும், அடங்காத ஆச்சர்யங்களைக் கூறும் ஆவணப்படம்!
வரலாற்று வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதென்ன?
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் குறைவான ரன்கள் அடித்தும் அதைக் கட்டுப்படுத்தி வென்ற முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சஹால், மாா்கோ யான்சென் கொல்கத்தா பேட்டிங் வரிசையை நொறுக்கினார்கள்.
இந்த நம்பமுடியாத வரலாற்று வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெற்றி
இந்த வெற்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம். எனது உள்ளுணர்வை நம்பினேன். பந்து லேசாக திரும்பியதும் சஹாலை அழைத்தேன். முடிந்த அளவுக்கு அவரது சுவாசத்தைக் கட்டுப்படுத்தினேன்.
சரியான இடத்தில் சரியான வீரர்களை வைத்து எதிர்க்க வேண்டுமென நினைத்தேன். இதைப் பற்றி பேசுவது கடினமானது. இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நான் இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தேன். ஒன்று கீழாக வந்தது. மற்றொன்று பேட்டின் அடியில் பட்டது. ஸ்வீப் ஷாட் அடிக்க வீரர்களுக்கு கடினமாக இருந்தது. பிட்ச்சில் சீரற்ற பௌன்சர்கள் இருந்தன.
16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதைப் பார்த்தால் நாங்கள் போதிய அளவுக்கு ரன்களை அடித்திருக்கிறோம் போலிருக்கிறது.
சஹால் பந்துவீசும்போது பிறந்த நம்பிக்கை
பௌன்சர்கள் சீரற்று இருப்பதால் அதை பந்துவீச்சாளர்களிடம் நினைவில் வைக்கும்படி கூறினேன். அவர்களும் அதைச் செய்தார்கள். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எங்களுக்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
சஹால் வீசிய பந்து திரும்பியதும் எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தன.
பேட்டர்களுக்கு நேராக அதிரடியான ஃபீல்டிங்கை அமைத்தேன். அவர்களும் அதற்கேற்ப தவறு செய்ததால் விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த வெற்றியும் நாங்கள் தன்னடக்கமாக இருக்க விரும்புகிறோம்.
இந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். அதை அடுத்த போட்டியில் முதல் பந்தில் இருந்தே செயல்படுத்துவோம் என்றார்.