46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!
முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார்.
பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக இருந்தார். தற்போது, லக்னௌ அணிக்கு ஆலோசலகராக செயல்பட்டு வருகிறார்.
ஹிந்தி நடிகை சாகரிகா காட்கே உடன் ஜாகீர் கானுக்கு 2017இல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தத் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகையும் ஜாகீர் கானின் மனைவியுமான சாகரிகா காட்கே தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்பட்டத்தினை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் குழந்தையின் பெயர் ஃபதேசின்ஹ் கான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
லக்னௌ அணியும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. முன்னாள் வீரர்கள், இளம் வீரர்கள் உள்பட பலரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.