செய்திகள் :

முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

post image

இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது.

இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடருக்காக இந்திய அணி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வங்கதேசம் சென்றடையவுள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

டி20 போட்டிகள் ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் கடைசி இரண்டு டி20 போட்டிகள் மிர்பூரில் நடைபெறவுள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளன.

டி20 தொடரில் விளையாடுவதற்காக முதல் முறையாக இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தொடருக்காக மட்டும் இந்திய அணி முதல் முறையாக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம்... மேலும் பார்க்க

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்... மேலும் பார்க்க

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின... மேலும் பார்க்க