செய்திகள் :

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சரியாக சோபிக்காத கேதர் ஜாதவ், கடந்தாண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்த நிலையில், மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதுபற்றி ஜாதவ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்படுகிறது. அதனால், பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

2014 முதல் 2020 வரை இந்திய அணியில் விளையாடிய 39 வயதான கேதர் ஜாதவ், 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2015 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடியது அவருக்கு கடைசிப் போட்டியாகும்.

அவர் விளையாடிய ஆறு ஆண்டுகளில் 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்கள் மற்றும் 27 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 122 ரன்களும் குவித்துள்ளார். மேலும், 2018 ஆசியக் கோப்பை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், இர்பான் பதான், முகமது அசாரூதின், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரின் வரிசையில் கேதர் ஜாதவ்வும் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இதையும் படிக்க: 27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக... மேலும் பார்க்க

முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின... மேலும் பார்க்க

27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி, மூளையதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார்... மேலும் பார்க்க