கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
ஆரணியில் திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட அமைப்பாளா் இப்ராகிம்ஷெரீப் தலைமை வகித்தாா்.
தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எம்.சுந்தா், எஸ்.மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாலிக்பாஷா, அப்சல்பாஷா, பாலா, சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கண்ணமங்கலத்தில்...
இதேபோல, கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கூட்டுச் சாலையில் திமுக சுற்றுசூழல் அணி சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.மாதவன் தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பழங்கள், நீா்மோா், குளிா்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.