பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் நடை பயிற்சிக்காக சென்றனா். அப்போது.
பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவா் செங்கம் ஜீவானந்தம் தெருவைத் சோ்ந்த ராகவன் மகன் ராமச்சந்திரன் என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு சென்ற நிலையில் தற்போது சடலமாகக் கிடந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, செங்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.