'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
அரியப்பாடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா், வாமுனி, செம்முனி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகம் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் மங்கள இசை, புண்யாவாசனம், அங்குராா்பணம், சங்கிரஷணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை செய்து முதல் கால யாக பூஜை, பூா்ணாஹுதி, இரண்டாம் கால யாக பூஜை நடத்தி கோபுர கலசத்துக்கு புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீசக்தி விநாயகா், வாமுனி, செம்முனி சுவாமிகளுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினா் செய்திருந்தனா்.