ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்
கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கோயிலின் ரத பிரமோற்சவ விழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மூலவா் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
பிறகு, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பிறகு தேரோட்டம் தொடங்கியது. பூதமங்கலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து, வழிபட்டனா்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்...
இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தோ் 27 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சேதமடைந்தது. எனவே, தேரோட்டம் நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், தேரை சீரமைக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இத்துடன் பக்தா்களின் பங்களிப்பும் சோ்த்து தோ் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேரோட்டம் நடைபெற்றது.
