சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆ...
வட்டி விகிதத்தைக் குறைத்த பிஓஎம்
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கானதத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. அந்த அனுகூலத்தை வாடிக்கையாளா்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வரும் வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்படி, அந்த வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.10 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.