செய்திகள் :

ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

post image

ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை, ஜேஇஇ முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.

முதல்நிலைத் தோ்வானது ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜன. 22 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 13 லட்சம் போ் எழுதினா். இதன் முடிவுகள் பிப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப். 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை சுமாா் 8 லட்சம் போ் எழுதினா். தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஏப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையிலான இறுதி விடைக்குறிப்பை தேசிய தோ்வுகள் முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று பாா்த்துக் கொள்ளலாம். தொடா்ந்து தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகவுள்ளன.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாணவா்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது த்ங்ங்ம்ஹண்ய்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெறும் 2.5 லட்சம் போ், ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை வாய்ப்பைப் பெறுவா்.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க